சிரிப்பை அடக்க முடியுமா உங்களுக்கு
#அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற?
போன வாரம் அவர் கிட்ட போய் எனக்கு சுகர் இருக்கான்னு பாருங்க டாக்டர்னு சொன்னேன்.
அதுக்கு உங்க வீட்டு ரேஷன் கார்ட கொண்டு வந்தாதானே பார்த்து சொல்ல முடியும்னு சொல்றார்.
#டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா மீன், கோழி சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்?
#அவர் பல் டாக்டர் இல்ல போலி டாக்டர்னு எப்படி சொல்ற?
பல் ஆடுதுன்னு இந்த டாக்டர் கிட்ட சொன்னதுக்கு, பரதநாட்டியமா? குச்சுப்புடியான்னு கேக்கிறாரு.
#டாக்டர்: இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு 4 தடவை சாப்பிடணும்!
நோயாளி: அது எப்படி டாக்டர் முடியும்?
டாக்டர் : ஏன் முடியாது?
நோயாளி: ஒரு தடவை முழுங்கின அதே மாத்திரையை அதுக்கப்புறம் எப்படி இன்னொரு முறை முழுங்க முடியும்?
---
என்ன சார் கண் டெஸ்ட் யாருக்கு?
எனக்குதான் டாக்டர்?
அப்ப பக்கத்துல ஒருத்தரை கூட்டிட்டு வந்துருக்கீங்களே அவர் எதுக்கு?
கண் டென்ஸ்டுன்னா போர்டுல இருக்கற எழுத்த படிச்சுக் காண்பிக்கச் சொல்வீங்க எனக்குத்தான் கண் தெரியாதே அதான் எனக்கு பதிலா அவர் படிச்சுச் சொல்வார்.
இவர் கணினி தொழில்நுட்பத் துறையில் வேலை பாக்குறவரு போல?
இதயத் துடிப்ப வச்சே எப்படி சொல்றீங்க டாக்டர்.
இதயம் லப் டப்புன்னு துடிக்காம லேப் டாப் லேப் டாப்புன்னு துடிக்குதே... அத வச்சித்தான்.