பல்லிக் கூடம்

மலர்கள் பாரம் தாங்காது
தெரிந்தும் தளிர்களின் தோள்களில்
புத்தக மூட்டை .......,


வண்ணத்துபூச்சி சிறகுகளில்
தோய்க்கப்படும் செயற்கை சாயம் .........,

பால்குடி மறக்காத தேவதைகள்
கடத்தப்படுகின்றன பள்ளிப் பேருந்துகளில் ...........,

அரைகுறை தமிழும் அழகாய் பேசும்
வேளையில்......,
அதிகாரம் செலுத்தும்
அந்நிய மொழிகள்

தெருமுனைகள் எங்கும்
புதிதாய் முளைக்கும்
குப்பைதொட்டிகளாய்
பள்ளிக்கூடங்கள்
அல்ல அவை .................,
பெற்றோர் ஒட்டிக்கொள்ளும்
பல்லிக்கூடங்கள்,

எழுதியவர் : haathim (17-Oct-14, 2:11 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 73

மேலே