சிக்கி முக்கி கற்கள்

அடர்ந்தக் காட்டில்
பனிகொட்டும் இரவில்
யாரும் அறியாத ஓர்
உண்மையான உன்னதத்தை
உள்ளூர உணர்ந்த உன்னத இரவு

அன்றொரு நாள் எதையோ தேடி
எதற்காகவோ எனை அறியாமல்
அடர்ந்த காட்டில் சிக்குண்டேன்
தன்னந்தனி காட்டில்
கடுங் குளிரை போக்க
பளிங்கு போல் மின்னும்
சிக்கி முக்கி கற்களை கொண்டு
சின்னதாய் தீ மூட்ட நினைத்தபோது
சிக்கி முக்கி கற்கள் ஒன்றோடு ஒன்று
சிக்கி கொள்ளாமல் உரசிய வேளையில்
சட்டென்று செவிகளில் கேட்ட ராகம்
செய்வது அறியாமல் திணறி போன நேரம்


கற்களை கொண்டு உரசிய போது
கன நேரமும் யோசிக்காமல்
அக்கற்கள் ஒன்றோடு ஒன்று
உரசிய நேரத்தில் உதிர்த்தது
சின்ன சின்ன தீப்பொறி
தீப்பொறியோடு சேர்த்து
ஒன்றோடு ஒன்று உரையாடி
மாசற்ற தன் மனதை
மங்கைக்கு உணர்த்திய கணம்

(பேசிக் கொண்ட வார்த்தைகள் )


நாம் உரசி கொண்டால்
நெடுங் காட்டையும் சட்டென
தீப்பற்ற வைக்கும் நெருப்பு
இவளையும் சேர்த்து மாய்த்து விடுமென
இக்கணம் வரை அறியாதவள்
இவள் மனதார நம்மை நம்புவதால்
இவளின் நம்பிக்கையை வீணடிக்காமல்
கடுகு அளவு நெருப்பை மட்டும் தந்து
இவளின் குளிரை மட்டும் போக்குக்வோம் என
அவ்விருக் கற்களும் பேசிக்கொண்டதால்
அன்றொரு இரவு நான் உயிர் பிழைத்தேன்
அன்றோடு என் ஆணவத்தையும் அழித்து விட்டேன் !!

உரசினால் தீப்பற்றும் - இருந்தும்
அவற்றுள் இல்லை ஆர்பாட்டம்
காட்டை எரிக்கும் சக்தி கொண்டும்
தன்னலம் இல்லை கொஞ்சமும்

அச்சிறு கற்க்கலுக்குள்ளும்
அளவிட முடியாத அளவில்
அன்பு நிறைந்து இருப்பதை மறந்து
இக் கலியுகத்தில் வாழும்
இதயமற்ற மனிதர்களை
அவற்றோடு ஒப்பிடுவதை
இனியேனும் நிறுத்த வேண்டும்

(கற்பனைக்காக எழுதியது பிழை இருந்தால் மன்னிக்கவும் கற்பனை என்றாலும் உண்மையை உரைத்ததாக நம்புகிறேன்

அதோடு என் கடைசி படைப்பில் சரவணா அவர்களின் கருத்தை கொண்டு காதல் பதிப்புகளை விடுத்து புதிதாக முயற்சித்தது )

எழுதியவர் : யாதிதா (17-Oct-14, 4:33 pm)
Tanglish : sikki mukki karkal
பார்வை : 559

மேலே