எனது நன்பன் ✿`•✿`•✿`•✿`•✿0046

எனது பலம் ,பலவீனம் அறிந்திருப்பான்
எதை சொன்னாலும்
சகித்துக்கொள்ள மாட்டான்

எனது பரம ரகசியங்களை உள்ளடக்கியிருப்பான்

நான் மறந்தாலும் அவனுள் பதிந்தவைகளை
அழித்துவிட மாட்டான்

தினசரி எனது இன்ப,துன்பங்களை பகிர்ந்து
கொள்வேன்

என் கண்ணீர்த்துளிகளும்
அவனை நனைத்திருக்கும்
என்னைப்போலவே
எனது வலிகளை சுமப்பவன்

தோல்வியையும் ஏற்றுக் கொள்வான்
வெற்றியையும் தனதாக்குவான்
சுயநலம் அறியாதவன்

இவன் தான் எனது நாட்குறிப்பு

எழுதியவர் : அ கமல்தாஸ் (17-Oct-14, 9:59 pm)
பார்வை : 292

சிறந்த கவிதைகள்

மேலே