தீபாவளி

தீப ஒளி தான் தீபாவளி
ஆயிரம் சுடர் ஏற்றும் நற்றிருநாள்
இருளைப் போக்க ஒளி வந்தது
ஒளியின் கற்றை இருளைக் கிழித்தது

ஒளி இல்லயேல் இருள்
ஆதலால் ஒளியை பெருக்கிடுவீர்
அகத்தின் இருளையும் அகற்றிடுவீர்
அதன் மாண்பினை உணர்ந்திடுவீர்

புத்தாடைகள் புனைந்திடுவீர்
புதிய உணர்வு பெற்றிடுவீர்
இனிய பண்டங்கள் உண்டிடுவீர்
அன்புடன் யாவர்கும் பகிர்ந்திடுவீர்

இன்பக் குதூகலம் அடைந்திடுவீர்
நாதமும் மேளமும் கேட்டிடுவீர்
நல் வாழ்த்துக்கள் பெற்றிடுவீர்
சகலமும் நிறைந்து வாழ்ந்திடுவீர்

வெடியும் வேட்டும் குறைத்திடுவீர்
மருளும் இருளும் போக்கிடுவீர்
மிளிரும் அருளை பெருக்கிடுவீர்
நற்றிரு நாளை கொண்டாடிடுவீர்

எழுதியவர் : ரமணி (18-Oct-14, 9:10 am)
பார்வை : 110

மேலே