காதல் மறியல் - சந்தோஷ்

தீடிர் வளைவுகளில்
வரும் பெரும் விபத்துகளில்
மாட்டி பிழைத்தவன் நான்.
அந்த தொன்னூறு டிகிரி
வளைவில், அவள் இடுப்பில்
மாட்டிக்கொண்ட எந்தன்
விழிகளை மீட்காமல் தவிக்கிறேன்.


விழி வழியில்
அவள் அனுப்பிய காதல்
உண்மைதானா ...?
பலமுறை
சம்மன் அனுப்பியும்
பதில்கள் தெரியவில்லை.
இவளொரு பெரிய
வாய்தா ராணியாக இருப்பாளோ ?


இந்திர சுந்தரிகளே..!
மன்மத மந்தரிகளே..!
அவள் விழியில்
தொலைந்த என் இதயத்தை
மீட்டெடுக்க வாருங்கள்.

என் கற்பனைகளே..!
என் கனவுகளே ..!
வாருங்கள் போராடுவோம்
அவள் செல்லும் பாதையில்
காதல் மறியல் செய்வோம்.
உணர்வு கொடிப்பிடித்து
உள்ளத்தில் உள்ளதை கேட்போம்.
இல்லையேல்,
காதல்துறையில் புகாரளித்து
காமன் நீதிமன்றத்தில் முறையிடுவோம்..

இனிவரும் நூறு ஆண்டுகளுக்கு
அவள் மட்டுமே
என் மனைவியென்று
கடும்தண்டனையை ஏற்க வைப்போம்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (18-Oct-14, 10:59 am)
பார்வை : 94

மேலே