மருதம்
என்னவாகும்
மருதம்
இனி ?
நீர்யின்றி
சாயும்
நிலங்கள்
புல்யின்றி
புதையும்
மாடுகள்
இறையின்றி
இறக்கும்
எலிகள்
திசைமாற்றி
பறக்கும்
கிளிகள்
அடிவயிற்றில்
எஞ்சிய
அமிலம்
இனியில்லை
தேன்கூடுகள்
வாழ்வின்
மீத
தேனையும்
உறிஞ்ச
வந்துவிட்டது
மீதேன்