விபத்து
ஒவ்வொரு முறையும் சண்டையிடுவதுபோல்
அம்முறையும் நீ சண்டையிட
சற்றே வித்தியாசமாய் நான் கோபப்பட
யாரும் அறியா ரகசிய மொழி நிறுத்தப்பட
உணர்வுகளின் தகவல் மொழி வருத்தபட
நீயா நானா மனமும் கலகம் நிகழ்த்திட
உருகிய நினைவுகள் உடலெங்கும் பரவிட
ஆதரவு தேடியே மதுவை நீயும் அருந்திட
மாயையில் நீ பாய்ச்சிய வேகம் எண்ணுகிறேன் ….
என் கண்முன்னே இன்னுமொரு "சாலைவிபத்து "