மெட்ராசு காதலு

மனசாச்சியில்லாத மாமா
மனச தவிக்க உடலாமா
சோக்கா கவுத்த மாமா - எனக்கு
டேக்கா குடுக்கலாமா

ரேஷன் பக்கம்போனாக்கா
படாபேஷா கண்ணடிக்குற
பைசா செலவில்லாம - நீ
நைசா பேசி மயக்குற

கூவாறு போல
குப்பயாச்சி மனசு
தண்டல்காரன் போல
தொண்டைய புடிக்குது நெனப்பு

சந்தக்கடயாட்டம்
சவுண்டு போடுது ஆச
சாமியாட்டம் ஒன்னசுத்தி - மனசு
ரௌண்டுகட்டுது பேச

உன் வார்த்தயெல்லாம்
சேர்த்துவைச்ச எம்மனசு
மோர்மார்கேட்டு
நா இருக்கும்போதே
இன்னொருத்திக்கு
போடாத நீ பிராக்கெட்டு

ஆசையா நீ வாங்கித்தந்த
செவப்பு கலரு தாவாணி
அசத்தலாதான்க் கீதுயா - என்
பாசக்கார பேமாணி

வயசுப்பொண்ண
வளச்சிபோட்ட வாத்தியாரே
சின்ன மனசுக்குள்ள
மசானாகொல்லையாடும் சாமியாரே

பொயப்பு தயப்பு பாக்கவுடாம
காதல் பண்ணுது பேஜாரு
ஊடுபூரா உண்மூஞ்சி தான் - என்
நெஞ்சுக்கு வந்துச்சி கோளாறு

இன்னாதான்யா பண்ணிப்புட்ட
என்ன துண்ணுது உன் நெனப்பு
பேசாம நீ போநீனாக்கா - என்
உயிருள கடையடப்பு

அய்யே!
ஒன் அயக கண்டா மயங்கிபுட்டேன்
அல்டிக்குற ரொம்ப
என்னவுட்டா
உன்ன சீண்ட ஏது வேற ரம்பே

குடிச்சி கிடிச்சி தொலைக்காம
குளிச்சி தலைய சீவு
பேமிலியா போன்னுகேட்டு வந்து
நடுவூட்டுல மாப்பிளயா நீ குந்து

நாளு கெயம பாத்து
மாலயத்தான் மாத்து
காதலிச்சி தொலச்சதுக்கு
கய்த்த நீட்டுறேன்
பருவப்பொண்ணு பாசத்தால - உன்
பாத மாத்துறேன்...!

எழுதியவர் : யாழ்மொழி (20-Oct-14, 2:07 pm)
பார்வை : 201

மேலே