வஞ்சகம் பூசுகிறான் ஒரு வாலிபன் - வேலு
போலி அன்பில் முகம் துடைத்தேன் தினம்
ஆசைகளை கூட்டி
அகிலத்தில் நீ தான் சிறந்தவன் என்றேன்
கவிதை ஓன்று புனைதான்
கரு விழி நீ என்றான்
இறுதியின் கலங்க வைத்து செல்கிறான்
வாழ்கையின் தூதுவன் என்றேன்
துரும்பாக எடுத்தெறிந்தாய்
கைபிடித்து நடந்தாய் தெருக்கள் தோறும்
காதலை கை ஏந்த செய்கிறான்
இரவுகள் தோறும் பேசி இனிப்பு வார்த்தைகள் ஊட்டி
இதயம் தொலைத்தேன் இறக்க மற்ற மனிதனிடம்
காமத்தை தீர்த்தாய் - கருவறையில் உன் நிழல் என்றேன்
கலைத்துவிடு என்கிறாய் ஈரம் இல்லாத மனிதன்
வஞ்சகம் பூசுகிறான் ஒரு வாலிபன்
காதல் என்ற பெயரில் !!