விரல் நுனியில் தீராத தீபம் - இராஜ்குமார்
விரல் நுனியில் தீராத தீபம்
==========================
" அண்ணா " - இச்சொல்
நுழைகின்ற தூரம்
கலைக்கின்ற பாரம் - என்
ஆழ்மனதில் நீளும்
சிரிப்பை வெறுப்பவன்
வலிகளாய் நிறைகிறான்
வலிகளை பார்த்தவன்
சிரிப்பையே தருகிறான்
எல்லாம் தொலைத்தவன்
எதையும் தேடாமல்
எல்லாம் கொடுப்பவன்
எதையும் இழக்காமல்
சிரித்த தருணங்கள்
சிதறலாய் உடையணுமா ..?
பகிர்ந்தப் பொழுதுகள்
உணர்வுகளை துரத்தணுமா ..?
பணம் வைத்தவன்தான்
பாசமும் வைக்கணுமா ...?
குணத்தை பார்த்தவன்
பிணமாக திரியணுமா ...?
ஒதுக்கிய அனுபவம்
அடிமனதில் அர்த்தப்படும்
அர்த்தப்படா அனுபவம்
முழுமனதாய் ஒதுக்கும்
குரல் சிதைவில்
கேட்காத சாபம் - ஏன் ?
விரல் நுனியில்
தீராத தீபம் - நான் ?
- இராஜ்குமார்