காத்திருப்பேன் காதலே

என்னவளை நான் மணக்க
என்ன விலை நான் கொடுக்க
என் அவல நிலை நான் கூற
எவரும் இல்லை அதை கேட்க

கல்தோன்றி மண்தோன்றா காலம்முன்
தோன்றியது காதல் என்பர்
என்னுள் தோன்றிய காதல்
வாழ நாதி இல்லையே

புரிதல் இல்லாத வயதில் வந்த காதல்
புனிதம் இல்லை என்றாள் எனை
பெற்றவள், புரிந்து வருவதற்கு காதல்
என்ன கணக்கு பாடமா

அவளை கண்ட நொடியில் எனை தொலைத்தேன்
ஜாதி குலம் பார்க்க நேரமில்லை
படிப்பு முடிந்தது வேலையும் கிடைத்தது
எனைப்பெற்றவன் மனம் மாறவில்லையே

ஊர்பேசும் உடன்பிறப்பு பேசும்
என்று என் பேச்சை அவன் மறந்தான்
நான் இழந்தது என் பேச்சை அல்ல
என் உயிர் மூச்சை என்று அவன் அறிவானா

காலப்போக்கில் எல்லாம் மாறிவிடும் என்றாள் அவள்,
கண் முன்னே நான் நாறுவதை காண மறுத்தாள்
மீற நினைத்தால் என்றோ மீறி இருப்பேன்
என் நம்பிக்கையை உடைத்து விட்டார்கள்
என்னை நம்பி வந்தவளை ஒதுக்கி வைத்தார்கள்

காத்திருப்பேன் காலம் கூடிவர
காதல் கை கூட காத்திருப்பேன்
என் காதலின் புனிதம் புரிய வைப்பேன்
இது என் காதலின் மீது சத்தியம்..

இந்த ஜென்மத்தில் இல்லை என்றால்
இன்னொரு ஜென்மம் கொண்டு
உன்னை கை பிடிப்பேன்..

எழுதியவர் : nithilam (20-Oct-14, 12:33 pm)
பார்வை : 251

மேலே