மனங்கவர் காதலி - 6

தேநீர் நானருந்தக் கோப்பையிலும் - தேமதுரம்
நீயருந்தச் சிறிதாகச் சிரிக்கின்றப் பூவினிலும்
சேர்த்துவைத்துக் கன்னத்தைக் கரந்தாங்கக் காத்திருந்தேன்!

ஓவியத்தைத் தாங்குகின்ற பாத்திரமே! - என்காதற்
சூத்திரமே சாத்திரம்நீ யறிவாயோ – இன்றென்னைச்
சந்தித்தல் உனக்கானச் சாத்திரமா மாதலால்,
மாத்திரைப் பொழுதுமெங்கும் போக்காமல் வந்திடுவாய்....!


******************************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (20-Oct-14, 2:08 pm)
பார்வை : 1069

மேலே