உல்டா இப்படியும் கவிதை எழுதலாம்

என்மனதை கொள்ளை கொண்டாயே ..
நீ வருவாயென ...
காலமெல்லாம் காத்திருப்பேன்..

நீயா ...யார் நீ ...
உன் பார்வை ஒன்றே போதும் ..
என்று சிங்கம் போல்
சொல்லும் ..எந்திரனாக !மன்னனாக
காதல் தேசத்தின் .. ஆயிரத்தில் ஒருவனாக
ராமன் தேடிய சீதையாக ..
வெற்றிக்கொடி கட்ட ..ஆசையில்
துப்பாக்கி முனையில் காத்திருக்கிறேன் .

விடியலில் ..வெய்யிலில் ..நான் .
நாளை முதல் ..அதீத
எதிர் நீச்சளோடு
கில்லிபாய்ச்சளுடன்
விஸ்வரூபமாய் மாறி
தச அவதாரத்துடன் உன்னை பார்த்தவுடன்
மயங்கினேன் ..சொல்லத்தயங்கினேன்.

ஆரம்பம் ..கொஞ்சம் சிவகாசி போல் பத்திகிச்சு..
கத்தி போல் வீரமுடன் துணிச்சலாக மாறியது .
குஷி ஏறியது

இரண்டாம் உலகமே தாண்டினாலும்
ஆதி பகவன் வேலாயுதம் கொண்டு
கும்கி யானையின் வீரத்தோடு
எங்கும் எப்பொழுதும் உனைக் காப்பேன்

சில்லன ஒரு காதலாய் ..கூடலாய்
தலைவா .!.காதலா..காதலா !! என்று
எனை சுடச் சுட அழைக்கவே ..
மின்னல் போல் பாய்ந்து வருவேன்

கன்னத்தில் முத்தமிட்டாள் நெஞ்சில்
ஜில் ஜில் என்று கேக்குமே ..அச்சுகமோ தனி .
-------------------------------------------------------------------
கொஞ்சம் வித்தியாசமாக இருக்கேட்டுமே என்று
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை

எழுதியவர் : திக்குவல்லை ரிப்னாஸ் - தென (20-Oct-14, 2:30 pm)
பார்வை : 160

மேலே