புன்னகை உரைக்கும் உதாரணங்கள்
சூரியன் இல்லாத ஒளிக்கதிர்...
பிறையும் இல்லா பௌர்ணமி...
100 டிகிரி தென்றல்...
நதி தீண்டா கரை...
கண்ணீர் இல்லா அழுகை...
இதயமற்ற உயிர் துடிப்பு...
சிவப்பணுக்கள் இல்லா இரத்தம்...
இமைகள் இன்றி உறக்கம்...
கண்கள் இன்றி கனவு...
உண்ணாமல் ஆறிவிடும் பசி...
இவை தான்- நீ என் அருகில் இல்லாததை அறிந்தும்
சௌக்கியமா என எவர் வினவினாலும்..
என் புன்னகை உரைக்கும் உதாரணங்கள்.