ஆனந்தம் அள்ளித்தரும் தீபாவளி
அன்றோர் அரக்கன் அழிந்திட்ட நன்னாளை
இன்றும் மறவாமல் எம்மவர்கள் -நன்றே
சுடரேற்றி நாடெங்கும் கொண்டாடி வாழ்வின்
இடர்நீங்கக் கொள்ளும் மரபு.
இருப்போர் கொடுத்து எழியோர்கைத் தூக்கி
விருப்போ டவர்தம் விழிநீர் துடைத்து
பெறுகின்ற ஆனந்த பேரின்பம் அள்ளித்
தரும்தீ பாவளி நன்று.
என் இனிய எழுத்து நண்பர்கள் saka கவிஞர்கள் எழுத்து நிறுவனர்கள் அனைவருக்கும் மைக்ழ்வான தீபாவளி வாழ்த்துக்கள்.
மெய்யன் நடராஜ்