தீர்ப்பாயா வலி

அழிப்பதில் தான் களிப்பு என்பதை
தீபாவளி சொல்லுகிறது
அளிப்பதில் தான் கழிப்பு என்று
மாற்றமாக விளங்கிவிட்டோம்

கெட்டவை அழிக்கப்பட்ட நல்ல நாளில்
கேட்டவை அளிக்கப்படுதலே நலவு
கெட்டதைக் கேட்டவனுக்கு அள்ளிக் கொடுக்கிறோம்
நல்லதைத் தொட்டவனுக்கு கிள்ளி விடுகிறோம்

ஏழைகள் இல்லாத உலகம் வேண்டும்
இலகுவான குறுக்குவழி இருக்கிறது
ஏழையின் பசியை ரசித்தால் போதும்
பட்டினிச் சாவால் ஏழையினம் அழிந்துவிடும்

செல்வந்தனுக்கு தீபாவளிக் கொண்டாட்டம்
செல்நொந்தவனுக்கு தலைவலியால் திண்டாட்டம்
நாளைக்கு கரியாகும் பட்டாசு பணத்தால்
ஏழைக்குக் கறியாகும் ஒத்தாசை செய்யலாமே

எழுதியவர் : மது மதி (21-Oct-14, 12:45 am)
பார்வை : 584

மேலே