விவேகானந்தர் விரும்பிய கல்வி

சமீபத்தில் எல்லோரும் தினசரியில் பார்த்து படித்துக்கொண்டிருக்கிற விசயம்தான் இது..ஆனால் சாதாரண விசயமல்ல..அவசரமாய் யோசிக்க வேண்டிய விசயம்...

பத்தாம் வகுப்பு தேர்வாகட்டும், பனிரெண்டாம் வகுப்பு தேர்வாகட்டும்..இத்தனை நாள் கோலோச்சி வந்தவை நாமக்கல் ,இராசிபுரம் வட்டார பள்ளிப்பண்ணைகள் மட்டுமே.. மாநிலத்திலே முதல் ஐந்து மதிப்பெண்கள் எடுப்பதென்பது , என்னவோ அவர்கள் அப்பன் வீட்டு சொத்து போலவும், மற்ற பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் இரண்டாந்தரமான மாணவர்கள் என்பதுபோலவுமான ஒரு மாயை இத்தனை நாள் நம்மையெல்லாம் சூழ்ந்திருந்தது இவர்களின் சூழ்ச்சியால்...அரசுப்பள்ளி மாணவர்கள் நிலையோ ..இன்னுமே ஒருபடி கீழ்..ஏதோ ஆப்ரிக்க கண்டத்திலிருந்து படிக்க வந்த அந்நியர் நிலையென்று சொன்னால்கூட தவறில்லை...

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிலைமையானது தலைகீழாக மாறிப்போனது... நாமக்கல் போய் இலட்சம்,இலட்சமாக கட்டி படித்தால்தான் மார்க் வாங்க முடியும் என்பது தவறென அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது..
எங்கு படித்தாலும் , கவனத்தோடு படித்தால் பள்ளிப்பண்ணைகளில் படிப்பவர்களை திண்ணைப்பள்ளியில் படிப்பவர்கள் கூட வென்று விடலாமென்கிற ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கிறது...

இனியாவது , மதிப்பெண்களுக்காக இந்த நிறுவனங்களை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை ; தங்களுக்கு அருகில் உள்ள நல்ல பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படித்தாலே போதுமென்பதை பெற்றோர்கள் தெரிந்து கொண்டால் சரி..

இதைவிடவும் இன்னொரு முக்கியமான விசயம்...வருங்காலத்திற்கு இதுதான் தேவையான விசயமும் கூட...

நம்முடைய குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவது என்பது எவ்வளவு முக்கியமோ , அதைவிடவும் முக்கியம் போட்டிகளும், பிரச்னைகளும் மிகுந்த நடைமுறை வாழ்க்கையை எதிர்த்து போராட வேண்டிய துணிச்சலும், தைரியமும்...கவனியுங்கள் நண்பர்களே , இந்த இரண்டையுமே மேற்சொன்ன பள்ளிப்பண்ணைகள் தருகின்றனவா ..என்றால் இல்லை..சிறிதளவு கூட இல்லை என்பதே ..நான் நாள்தோறும் சந்திக்கும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெரும்பாலான பெற்றோர்களின் வாக்குமூலம்...

வெறும் மார்க்குக்காக இந்த மாதிரி பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்த்துவீர்கள் என்றால்...தயவு செய்து உங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்... அதுவும் இஞ்சினிரிங் படிப்புகளே மதிப்பிழந்து வரும் இன்றைய சூழலில் இனி மார்க்குகள் மட்டுமே போதுமென்பது தவறான ஒன்று..

மார்க்குகளோடு, ஆளுமைத்திறன்,பேச்சாற்றல், தியானம், யோகா, உடற்பயிற்சி ..என இவைகளையும் திறன்பட கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களே எதிரகாலத்தில் உங்களது குழந்தைகளின் ஒளிமயமான வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும்...

யோசியுங்கள்.. +2 வில் 1200க்கு 1175+ எடுத்து எந்த கல்லூரியில் வேண்டுமென்றாலும் இடம் கிடைக்கும்..என்கிற மாணவர்கள் சாதிப்பதைவிட , 1000+ மதிப்பெண் எடுத்தாலும் , தனித்திறமைகளோடு வெளிவருகிற மாணவர்களே சிகரத்தை அதிகம் தொடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

இந்த தேசத்தின் கல்வி முறையும் இதுதானே.. வாழ்க்கை கல்வி என்பதுதானே நம் பாரம்பர்ய கல்வி... ..விவேகானந்தர் விரும்பிய கல்வியும் இதுவே..

தன்னம்பிக்கையை தராத எந்த கல்வியும் 100% பிரயோசனமற்றது...

படித்தால் மட்டும் போதுமா.. என்ன..???

எழுதியவர் : முருகானந்தன் (21-Oct-14, 11:24 pm)
பார்வை : 319

சிறந்த கட்டுரைகள்

மேலே