வாழ்த்துகிறோம் அனைவரையும்

வளர்ந்த கூட்டில் நாங்களில்லை
வளர்த்த கூட்டில் குஞ்சுகளில்லை
சேர்ந்து களித்தத் தீபாவளி
தனித்தே அவரவரிடத்தில் கொண்டாடுகிறோம்
பிடிக்குமென செய்த இனிப்பும்
இட்லியோடு சேர்ந்த கோழிக்கறியும்
எப்போதும்போல் சுவையாய் இருந்ததென்னவோ
உண்மைதான் மனது நிறையாத போதினிலும்
எங்கிருந்தாலும் நலமுடன் வாழ
தீபாவளித்திருநாளில் வாழ்த்துகிறோம் அனைவரையும்