பெயரிடப் படாத கவிதை

[முன் குறிப்பு : இன்று பெங்களூரில் 4 வயது சிறுமியை அந்த பள்ளியின் ஆசிரியரே பலாத்காரம் செய்த கொடுமையை செய்தியில் பார்த்து மனம் வெறுத்து எழுதியது... நானும் பெங்களூரிலேயே இருப்பதால் இந்த நிகழ்வு என் நெஞ்சில் ஈட்டியை பாய்த்தது... தாங்க முடியாமல் வரிகளில் ஆறுதலை தேடுகிறேன்...]

ஆசிரியர் என்பது
.
.
.
.
.

வாழ்கையில் கணக்கை சொல்லி தருவதா
இல்லை
வாழ்க்கை கணக்கையே கொள்ளி இடுவதா?

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதா
இல்லை
குழந்தையை காமமும் மென்று திண்பதா?

ஓடி விளையாடும் பாப்பாவா
இல்லை
ஓடி ஒளிந்திடும் பாப்பாவா

கல்வியை கண்திறந்து வைப்பீரா
இல்லை
கலவியை கண்திறந்து வைப்பீரா

ஒழுக்கம் கற்று தருவீரா
இல்லை
ஒழுக்கம் கெட்டு திரிவீரா

இது ஜனநாயக நாடா ?
இல்லை
ஜன நாய்களின் நாடா ?

எழுதியவர் : ஜின்னா (22-Oct-14, 10:40 pm)
பார்வை : 399

மேலே