கனவுகள் மெய்ப்பட வேண்டும்

அன்பின் மொழியில் அன்னையின் கனவு
அனுபவ அறிவில் தந்தையின் கனவு
அஹிம்சை வடிவில் சுதந்திர கனவு
ஆசை உருவில் காதலின் கனவு
மகனின் பணத்தில் பத்திரமாய் கனவு
மகளின் மணத்தில் மத்தாப்பாய் கனவு
தாகத்தின் தவிப்பில் தண்ணீர்தான் கனவு
சோகத்தின் சுமையில் கண்ணீரும் கனவு
நடிப்பின் ஆழத்தில் நாணம்தான் கனவு
படிப்பின் பயத்தில் பக்குவமே கனவு
வலிகளின் விளிம்பில் விருதில் கனவு
விருந்தின் முடிவில் மருந்திலும் கனவு
அரசியல்வாதிக்கு வாக்கிலே கனவு
அடிக்கடி விடுமுறைக்கு பொய்சாக்கிலே கனவு
பசித்தவன் வயிற்றுக்கு மிஞ்சியதும் கனவு
படித்தவன் வாழ்விற்கு மிதமிஞ்சியதும் கனவு
துப்புரவு தொழிலுக்கு தூய்மைதான் கனவு
வழக்குரைநர் வாய்க்கு வாய்மையே கனவு
மரணம் மரித்தலே மருத்துவரின் கனவு
மதிப்பெண் பிடித்தலே மாணவனின் கனவு
காலத்தில் கல்யாணம் கன்னிகளின் கனவு
கட்டாய வேலை காளையர்களின் கனவு
ஊருக்கென்று வாழ்ந்தால் பேருக்குதான் கனவு
உண்மைகாக வாழ்ந்தால் உனக்கேது கனவு?
மாமியார் வாழ்வில் மருமகளாய் கனவு
மனைவியர் வாழ்வில் மகன்/மகளாய் கனவு
காலைச் சூரியன் கண்ணின் கனவு
களைகள் பறிப்பது மண்ணின் கனவு
ஏக்கத்தில் இருந்தால் எண்ணங்கள் கனவு
தாக்கத்தில் இருந்தால் தயக்கங்கள் கனவு
கர்ணன் வாழ்வில் கொடைகளால் கனவு
தர்மன் வாழ்வில் தம்பிகளால் கனவு
கவிஞன் எழுத்து கனவுகளின் கனவு
கலாமின் எழுத்து கரைசேரும் கனவு
மாணவர் வாழ்வில் மகிழ்ச்சியிலே கனவு
மற்றவர் வாழ்வில் மாணவத்திலே கனவு
கனவின் கலைஞர்களுக்கு கலாமின் கனவு
கடைசிப் பக்கத்திலும் கருத்தாய் ஒரு கனவு
கனவுகள் மெய்பட வேண்டும்...- நாங்கள்
கனவுகளை காதலிக்கும் போதே....

எழுதியவர் : சுப்புராஜ் (23-Oct-14, 12:39 am)
சேர்த்தது : Subburaj arumugam
பார்வை : 154

மேலே