தோன்றும் போதே மறைந்ததடி
*
மழை துளி விழும் முன்பே
ஆவியானது
என் ரோஜா மலரும் போதே
வாடியதடி
*
உனக்காக எழுதிய
முதல் கவிதை காகிதம்
கழுதையின் இரைப்பைக்கு
இரையானதடி
*
என் இந்த நிலைக்கு
கல்லறை பிணங்கள்
கூட கண்ணீர் சிந்துமடி
*
என் சாலையில்
உன் காலடி பட்டா
என் கண்கள் அதைக் கண்டா
காணாமல் போகிறதே எந்தன் உள்ளம்
*
மீன் என துள்ளவிட்ட மனம்
கருவாடு என காய்ந்ததடி
நான் கண்ட காட்சிகள்
எல்லாம் கணவாய் மறைந்ததடி
*
உன் வரலாறு எதுக்கு
நான் அறிந்தேன்
தொடங்கும் முன்னே முடிந்ததடி
*
இனி உன் பாதையில்
காதல் முள்ளை போட மாட்டேன்
உன் நினைவில் தூங்கமாட்டேன்
நான் துறவியே
*
உன் கண்ணாடி போத்திய கண்ணில்
நான் ஒளிந்துயிருந்தாலும்
என்னை ஒழித்துவிடு
*
கண்பார்வை இழந்தவன்
சிலையை காதலித்துவிட்டேன்
பார்வை தெரிந்ததடி
ஏமாந்துவிட்டேன்
*
ஆற்றின் அலை
கடல் அலையென ஆனதடி
கருவம் கொண்டுள்ளேன்
*
காதலை காற்றில் விட்டுவிட்டேன்
காதலை கடலில் எறிந்துவிட்டேன்
காதலை மண்ணில் போதைத்துவிட்டேன்
இனி தொந்தரவு செய்யமாட்டேன்