உடைகிறேன்
மழை தூரலே கொஞ்சம் நில்லேன்றேன் நீ நிற்காமல் தூவுகிறாய்
வான் நிலவே நீ ஒரு நாள் எனக்காக வெளிச்சம் தராமல் ஓய்வெடு என்றேன் நீ ஓயாமல் வெளிச்சம் தருகிறாய்
வாசம் தரும் மலரே எனக்காக ஒரு நாள் வாசம் வீசாமல் காத்திரு என்றேன் நீ எதும் பேசாமல் வாசமே வீசுகிறாய்
அன்பே ஒரு நாள் உன் கை பிடித்து நடக்க ஆசைப்பட்டு அழைகிறேன் ஆனால் நீ அதற்க்கு நேரம் இல்லை என்று என்னை ஓரம் கட்டுகிறாய் என் இதயத்தை ஓங்கி அடிக்கிறாய் பெண்ணே.