வடிவங்கள் வேறு வேறு
உன் வெற்றிகள்
நீ அடைந்தவை என்கிறாய்..
அவைகள் எல்லாமே..
உனக்கு கிடைத்தவை தானே?
உன் வளர்ச்சிகள்
உன் முயற்சிகளால் என்கிறாய்..
உள்ளே பொதிந்திருக்கும்
அருளினால் என்பது மறந்தாயோ?
உன் தோல்விகள்..
உன்னால் அல்ல என்கிறாய்..
உன்னைப் படைத்தவனையும்
விட்டு விடாமல் அல்லவோ?
ஒவ்வொரு துளியும்
சேர்ந்த பின்னரே ..
உரு மாற்றம் கொண்ட பின்னரே..
அது..
நீர் என்கிறாய்..
ஆறு என்கிறாய்..
கடல் என்கிறாய்..
மழை என்கிறாய்..
ஆதியிலும் ..முடிவிலும்..
எப்பொழுதும் அது நீர்தான்
என்பதை அறிந்திடாமல்..!
இது புரிந்தவன்
இவை எதையும் நீராய் காண்கிறான்..
எல்லாவற்றிலும் இறையை காண்கிறான் ..
இன்பத்தில் மறைந்துள்ள துன்பத்தையும்
துன்பத்தில் ஒளிந்துள்ள இன்பத்தையும்
எளிதாய்க் கண்டு கடக்கிறான்..!