ஏழை தீபாவளி

நோட்டு இல்லாததால் வேட்டு வாங்கவில்லை
கண் கசக்கும் இளைய மகன்

படித்த நோட்டு கிழிச்சி பாதிலிலே தொங்க
புது நோட்டுக்கு காத்திருக்கும் மூத்த மகன்

முந்தாணி இல்லாத சீலையில
முன்னும் பின்னும் மறச்சி மானத்த காத்து நிற்கும் முத்த மவ

முழங்கால் பாவடையிலே
என்ன விஷயம் கூட தெரியாத விளையாட்டு கடைசி மவ

காட்டுக்கு போன மனுஷன் இன்னும் காணல
கண் விழித்திருக்கும் கருவாலி மனைவி

காலையில போட * மூட்ட
இன்னும் இறங்கல
ஏரிக்கரையில ஏத்தமா உருள
ஊருக்கு பஞ்சாயத்து சொல்லி
ஒபாமாவுக்கு சவால் விடும் குடிகாரனுக்கு என்ன தீபாவளி

ஏழைக்கு ஏது தீபாவளி
தினம் தீ -வலி தான்


* மூட்ட - சில கிராமங்களில் சாராய கடையில் மூட்டை என்று தான் சொல்லி வாங்குவார்கள்

எழுதியவர் : வேலு (24-Oct-14, 5:14 pm)
Tanglish : aezhai theebavali
பார்வை : 482

மேலே