என் காதல்

என் காதல் என்பது உயிரில் தொடங்கியது
பார்வைகளில் வளர்ந்தது
கண்ணீரில் நனைந்தது

என் காதல் நெருப்பை கூட சுட்டு விடும்
வானுக்கும் நீர் வார்க்கும்

சுகமாய் வருவதா
சுமையை தருவதா

காரணம் இல்லாமலும் அன்பை வைக்கும்
அன்பு அதிகம் ஆனால்
நெஞ்சம் உயிரை வைக்கும்

உள்ளம் இரண்டும் இணைய விடிலும்காதல் வரும் அது ஒருதலையாக கூட நமக்கு இன்பம் தரும்

மௌனத்தில் கூட பேசும் அது மலைகளில் பூக்களை வீசும்

என் தேவதையே நீ பிரிந்தால் என்ன நான் எரிந்தால் என்ன


இந்த காதல் வேண்டும் எல்லா உயிர்க்கும்

இது தீண்டும் எல்லார் மனதையும்

காதல் இன்றி யாரும் இல்லை

மரணம் என்றும் காதலுக்கில்லை....

எழுதியவர் : லெனின் கார்கி (24-Oct-14, 11:49 pm)
சேர்த்தது : Lenin
பார்வை : 65

மேலே