உனதன்பிற்கு ஒற்றைத் தலைப்பு பிடிக்கவில்லையெனக்கு
நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே வருகிறாய்,
சிறிது நேரம் இரு வருகிறேன் என்றால் முடியாது,
நானும் கூட வருவேன் என்பாய்...!
நான் இருந்தால்,நானும் இருப்பேன்..
நான் இறந்தால்,நானும் இறப்பேன்..
நான் சாப்பிடாமல் இருந்தால்,நானும் பசித்திருப்பேன்..
எல்லாவற்றிலும் விடாமல் போட்டியாக பேசுவாய்,
நடந்து கொள்வாய்,
அதே சமயம்...
என்னை விட்டு கொடுக்காமலும்...!
எப்போதும்...
என்னைத் தனித்திருக்க விடுவதில்லை நீ,
என் நிழல் நீங்கும் நேரங்களில் கூட...!
எல்லாவற்றிலும் ஒத்திருக்கும் நீ,
ஒரு விசயத்தில் மட்டும்..
எதிராகி செய்யும் சதி ஏன் என்று,
இன்று வரை விளங்கவில்லை எனக்கு...!
நான் சிரிக்கும் நேரங்களில்..
சேர்ந்து சிரித்து விட்டு,
நான் அழும் நேரங்களில் மட்டும்,
என் தோள் தொட்டு ஆறுதலாய்...
அரவணைத்துப் பேசும் மாயம் என்னவோ...?
என்றும் தீராத பிரியங்களுடன்..... நான் :-)
-