இன்று அநாதை
நேற்று என்னுடன் இருந்த
தாய் , தந்தை இன்று என்னுடன்
இல்லை பிறந்த பிள்ளை மாறி
கிடைத்து விட்டது என
அறிந்ததும்
அன்பு காட்டிய சகோதரர்கள்
இன்று என் அருகே இல்லை
நான் யாரோ ஒரு தாயின்
மகள் என அறிந்ததும்
விஷயம் அறிந்து குடும்பமும்
வர எல்லோர் கண்ணிலும்
என்னை குத்தும் பார்வை
நான் என்ன தவறு
செய்தேன்
ஏக்கத்துடன் தாயை பார்த்தேன்
அவள் பால் குடித்தவலல்லவா
நான் அவள் கண்ணில் சிறிது
இரக்கம்
சகோதரர்களை நோக்க அவர்கள்
குடும்பத்தாருடன் நான்
என்ன ஜாதி எனும் சண்டை
என் வீட்டு அயலவர்கள்
என்னால் தான் வீட்டில்
சண்டை என குத்திக் காட்ட
இடிந்து போனேன்
நேற்றுவரை நான் வீட்டுக்கு
வந்த சீதேவி எனக் கேட்ட
வாயால் இப்போது மூதேவி
எனக் கேட்கிறேன்
இது தான் உலக நியதியா ?
இன்னும் இந்த தாய் , தந்தை
எனக்கு சொந்தமா ?
முடிவு தெரிந்த பின் நான்
இங்கே இருப்பது சரியா ?
உடுதுணியும் எனக்கு
சொந்தமில்லை என்ற நிலையில்
புதிய உறவுகள் தேடி
அநாதை இல்லம் நோக்கி
நடந்தேன்