வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை..உன் வாழ்க்கையும்
ஒரு கவிதை தான் ...
எதுகையும் மோனையும் வேறல்ல இனிக்கும்
இன்பமும் துவர்க்கும் துன்பமுமே ......
இயைபு என்பது ஒன்றுமில்லை ...இயல்பாய்
காலத்தை கடத்திச்செல்லும் காலனின் நொடிகளே ...
அணி என்பது யாதெனில்..உன் வெற்றிக்கு
சூட்டப்படும் புகழ் மாலைகளே....
முரண் என்பதும் முக்கியமே ...அது உனக்கும் உன்
செயலுக்கும் இருக்கும் இடைவெளி .....
அன்பு,காதல்,கோபம் போன்ற திரிகளால் தொடுத்த
தொடைநயமே வாழ்க்கை ......
எழுதியவனுக்கு நன்றி சொல்லி ..வாசகனே
வாழ்க்கை கவிதையை வாசிக்க கற்றுக்கொள் !!!!!!!!
.