லாயக் கொட்டகைகள்

வெண்ணிற முதுகு
மினுமினுத்திருந்தால்
அடுத்த நொடியில் நீ
அரேபிய தேசத்தவனின்
பிள்ளையாகிப் போகிறாய்...!!

உன் பிடரி முடிகள்
வருடுவதொன்றும் மிருக
நேசமல்ல....!
அதற்குள் வன்மமிருக்கிறது...!!

உனது அரேபியஜீங்களின்
நீள் கால்களுக்கு
பூனை நடை பழக்கியிருக்கிறோம்
தெரியுமா எங்களில்.?.

லகானுக்குப் பழகியிரா
உன் நாசிகளைப்
போலவே எங்களில்
தாசிகளும்...!! இரண்டும்
ஒழுகுவதில்லை...

உனக்கான காரணம்..
ரணப்பட்டிருக்கவில்லை ...
அவர்களுக்கானது
ரணம்.... பட்டு இருக்கவில்லை ..!!

அவிழ்க்கும் வரைக்கும்
பூங்கொத்தென புகழுரைப்போம்...
அரைவெளிச்ச
அம்மணம் கண்டால் உன்னை
உவமைக்கழைப்போம்...
அதுவும் அரேபியங்களிலிருந்தே..!!

இன்னும் புலப்படவில்லை
எனக்கு...
குதிரைப் படமிட்ட
ஆணுறை அவசரங்களுக்கு
குதிரையென
வர்ணிப்பது எதற்காகவென்று...?

பெண்களாய் இருக்கும்
குதிரைகளே...! அல்லாத
குதிரைகளாகி இருக்கும்
பெண்களே...!!

உங்கள் கால்களுக்கான
வேலை....
நடப்பது மட்டும்தானா..?

லாயக்கொட்டைகை
சுத்தம் செய்பவன்
சொல்லிக் கொண்டிருக்கிறான்...

முந்தாநாள் குதிரை
மிதித்து யாரோ ஒருவன்
செத்து விட்டிருந்தானென்று ..!!

எழுதியவர் : நல்லை.சரவணா (25-Oct-14, 11:12 am)
பார்வை : 568

மேலே