மாற்றம் மட்டுமே மாறாதது

வலி தரும் வாழ்க்கை
நெடுந்தூர பயணம்
தினம், தினம் பாடம்
ஓடுகின்ற நாளும்

திருத்தி கொள்ள
முடிந்தால் எல்லா நாளையும்
நமகேற்றாற்போல் மாற்றிக்கொள்ள
நிற்கும் வரிசை நெடுந்தூரம்

அவரவர் விருப்பம் நிறைவேறும்
அதிலும் சில தோல்வி வந்து போகும்
மாற்றம் மட்டுமே மாறாதது
என புரிந்து கொள்வதே வாழ்க்கையாகும்

எழுதியவர் : ருத்ரன் (25-Oct-14, 10:57 am)
பார்வை : 87

மேலே