நீ மட்டும் ஏன்

நீ மட்டும் ஏன்?
வானமும் பூமியும்
எப்போதும் உரசிக் கொண்டு
என்ன மொழி பேசுகின்றன?
காற்றாய் விழி வாள் வீசிப் பார்க்குமோ?
மழையாய் ஆனந்தக் கண்ணீர் விடுமோ?
மேகமாய் மோதி முத்தமிழில் இசைக்குமோ?
விழிகளால் வெப்பப் பூக்கள் தூவி வாழ்த்துமோ ?
மேலிருந்து விழும்
தென்னங் குலைகளைப் போல
துடிதுடித்து வீழுமோ?
ஈர ஆடை உடுத்தி மகிழுமோ?
மறைந்திருந்து வில் அம்பைப் பூட்டி
ஏழு வண்ண வானவில்லை தூது விடுமோ?
இத்தனையும் கண்டு மிதக்குமோ ?
மறைந்திருந்துதான் ரசிக்குமோ?
அந்தரத்தில்வெள்ளி நிலா.....!
உன்னைக் கண்ட பொழுதில்
வியந்துதான் போகிறேன்
மீண்டும் வியப்பில்
நீலத் தோட்டத்து நிலாவாய் மிதந்திடவா....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
