இன்ப சுதந்திரம்

பரங்கியன் படைஎடுத்தான் நம் பாரத
திருநாட்டிலே ....மிளகு மணிகளுக்கு
நாக்கை தொங்க போட்டுகொண்டு ..சிரித்தான்
அந்த நாய்மகன்.....!

வந்தாரை வாழவைக்கும் இந்த தென்
நாட்டிலே..தெம்மாங்கு பாடும் வயல்
வெளிகளிலே துப்பாக்கி மருந்தினை
துவினான் துஷ்டன் ....!

சூழ்ச்சியைப் புரிந்து ஆட்சியைப் புடித்தான்
என் குலப்பெண்கள் கருணை இன்றி
சூறையாடப்பட்டார்கள்...அந்த ஆண்மை
இலாதவன் கைகளில் ...!

அக்கிரமங்கள் அளவற்று போகவே ..உறங்கிக்
கொண்டிருந்த உறைவாள்கள் உயிர்
பெற்றது...உறுமிக்கொண்டிருந்த நாய்களின்
சிரம் வெட்டிச் சாய்க்கப்பட்டது !

முடிந்ததா இந்த அவலம்..பின் தொடர்ந்தான்
ப்ரிடிஷ்காரனும் பிரெஞ்ச்காரனும்..என்
தாய் திருநாட்டை கூறு போட அடித்துக்
கொண்டார்கள் அன்னியர் இவனும் ..!

பழைய நிலை புதிதானது...உலகப்போர்
நடைபெற பாரதத்தை பணயமாக்கினான்
பஞ்சம் பரவிற்று நாடெங்கும்..குழந்தை தன்
தாயிடம் பால் சுரக்கவில்லை என வெதும்பியது..!

பசியில் அழுகும் எம் பிள்ளைக்கு பாலுட்ட
முடியவில்லை என வெகுண்டு எழுந்தாள் அன்னை,
பாரதத்தாயின் வயிற்றிலே எண்ணற்ற சரித்திரப்
புதல்வர்கள் அவதரித்தனர் ..!!

வெள்ளையர் ஆட்சிக் கட்டிலின் கால்கள்
வெட்டி யெடுக்கப்பட்து..கோடான கோடி
மக்களின் மனதினில் எறிந்த சுதந்திரத் தீ
அவன் தோளை வாடி வதைத்தது....!


சொல்லிமாள முடியா துன்பங்களை அனு
பவித்தோம்...இம்மண்ணின் மைந்தர்களின்
வீரத் தியாகத்தால் திளைத்து கொண்டிருக்கிறோம்
இந்த இன்ப சுதந்திரத்தில் ...!!!!!!

ஜெய்கிந்த்!!!!

எழுதியவர் : விஷ்ணு பிரதீப் (25-Oct-14, 11:32 pm)
Tanglish : inba suthanthiram
பார்வை : 96

மேலே