தனிமையில் ஒருவனாய்

உருகினேன்
நானும்
மெழுகாக

ஊர்ப்பசிக்கு
என்மனம்
இரையாக

உறவால்
வெந்தது பாதி
பிரிவால்
நொந்தது பாதி

அனாதையாய்
நானும்
அலைகிறேன்
அன்பின்றி
உலகினில்
கரைகிறேன்

சொந்தமில்லை
பந்தமில்லை
வலிகளை
சொல்ல
வார்த்தையில்லை

அன்பை
யாரும்
சொன்னதில்லை

பாசம்
யாரும்
காட்டவில்லை

வளர்ந்தேன்
முள்ளுச்செடியாக
வாழ்வேன்
கள்ளிச்செடியாக

சோறுபோட்ட
சொந்தம்
கூறு போட்டது
பிழையான
கணக்கை
யாரு போட்டது

ஓயாது
மனக்குழந்தை
சத்தமிட
வந்ததில்லை
யாரும்-அதை
தூக்கி
முத்தமிட

கைமுழுக்க
அள்ளி வந்தேன்
அன்பென்னும்
பூக்கள்

கோர்ப்பதற்கும்
யாருமில்லை
கோர்த்தால்-அதை
சேர்ப்பதற்கும்
யாருமில்லை

எழுதியவர் : அலைகள் (26-Oct-14, 10:16 am)
பார்வை : 57

மேலே