ஏக்கம்
![](https://eluthu.com/images/loading.gif)
விடுமுறை இன்றி
விடியும் வரை
பேசுகிறேன்
வேதனையின் விளிம்பில்
நின்று
வேடிக்கையாய் பேசுகிறேன்
விரும்பினர் அனைவரும்
வேண்டினர் மீண்டும்
பேசிடவே....
பேச்சழகி என்றனர்
பெயரும் புகழும்
கிடைத்தது..
என்ன இருந்தும்
என்னம்மா
என் அம்மா நீ
இல்லை என்னிடத்தில்
அம்மா என்று
நான் அழைத்து
கேட்டதுண்டா நீ
அன்று
ஆதங்கம் கண்ணீராய் மாற
அழுகின்றேன் மௌனமாய்
ஆண்டவனே வேண்டாம் எனக்கு
அர்த்தம் அற்ற இவ்வாழ்வு
உருமாறி வந்தேனும்
ஊமையாகிடு என் பேச்சை......