விடையறியா வினா

இவனை
நீங்கள் பார்த்துயிருக்கலாம்
உங்கள் பயணத்தில்
எங்கேனும் உடன்
பயணித்தும் இருக்கலாம்

இவனிடமிருப்பது
வினாக்கள் மட்டுமே
அவன்
விடையறியா வினாக்களே...

வரிசையில் நிற்க
தனக்கு மட்டும் உணவேன
இவன் யோசித்திருக்ககூடும்?

யாருமில்லாத
தனிமை இரவு
இவனுக்காய் காத்திருக்கிறது
இவன் கனவில்
யாரோ ஒருதாய்
நிலாச்சோறு ஊட்டியிருக்கலாம்
யானை சவாரி செய்ய
தந்தையும் வந்திருக்கலாம்

அவன் பார்வையில்
கண்ட குடும்பம்
தனக்கில்லையென
கண்கள் கண்ணீர்
சிந்தியிருக்கும்....

இவன் வினாக்களோடு
வாழ்கிறான்

இவன் விடையறிய
தொடங்கும் வேளை
இன்னொரு சிறுவன்
அதே வினாக்களுடன்
வாழத் தொடங்கியிருப்பான்....

பாண்டிய இளவல் (மது. க)

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது. க) (26-Oct-14, 2:18 pm)
பார்வை : 103

மேலே