போக தட்சணை
விலைபேசி ஆண்விற்கும் விபச்சாரம் ஒழிந்தினிமேல்
.......விபரீத மற்றவொரு திருமணத்தைக் காண்பதற்கே
மலைவீசும் தென்றலென மங்கயரைப் பெற்றவுள்ளம்
.......மகிழ்ந்திங்கு குளிர்ந்திடும்நாள் என்றுவரும் என்னிறையே
கலையாளும் கன்னியவள் கற்றினிதாய் வெளியுலகம்
....... கரைகண்டு எதிர்காலம் வரும்தடைகள் உடைத்தெறியும்
நிலைகாண வேண்டும்நான் நித்தியனே அருள்புரிவாய்
........நிரந்தரமாய் இதுநிகழ நிமிர்ந்துவிடும் பெண்மையுமே