கொஞ்சிடும் அழகே

கொஞ்சிடும் அழகே

காலையும் மாலையும்
மயங்கிடுமே உன்னிடம்
தினம் தினம் .....

கள்ளமில்லா பேரழகு காண
கொஞ்சிடவரும்
அணிலும் பட்டாம்பூச்சிகளும் ...

பொம்மைக ளெல்லாம்
தாவிடுமே அள்ளி அணைக்க
தன்னோடு விளையாட ....!

ஏங்குதே மனம் உன்னையே
கரங்கள் அழைக்குமுன்னே
தாவி அணைத்திட....

பதித்திடுதேமுத்தங்களை
வாரி அணைத்ததும்
ரோஜா இதழ்களிலும் கன்னங்களிலும்....

உன்னைப் பார்த்ததும்
ஊரும் அழகாச்சு
உறவும் அழகாச்சு....

மறந்திடுமே கவலைகளும்
மன பாரங்களும்
காற்றைத் தேடும் புத்தகங்களாக....

கொஞ்சிடும் அழகே
கொஞ்சவரும் உன்னிடம்
பேரழகெல்லாம் ....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (27-Oct-14, 10:34 am)
பார்வை : 456

மேலே