வாழ்க்கையின் பொருள்  

எப்போதும் பரிசாக புன்னகை - 
கருணை கண்களை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் -ஒருபோதும் வெறுப்போடு பார்த்ததில்லை -  சேவைகளில் இரவுகளின் நகருதல் தெரிந்ததே இல்லை-
திருமணத்தின் கனவே இருவரின் மனதிலும் தனி குடித்தனமாக வாழ வேண்டும் - மறைந்திருந்த எண்ணம் கைகூடியது- தனிமை வாழ்க்கை இனிமையானது- என்று போனாவர்களுக்குள்
நாடியது கிடைக்காது போனதும்;
அடுத்த சில ஆண்டுகளில் அதிர்ச்சி
கடமைகள் குவிந்தன- எதிர்பார்த்த தனிமை பாரமானது - உறவுகள் தூரமானது- இரவு நகருவது கூட மெதுவானது- கண்களில் இருந்த கருணை போனது-
என்ன வேண்டுமோ அதை தெரியாமல் தேர்ந்தார்கள்- உறவுகளை நண்பர்ககளை அன்பானவர்களை விட்டு
விலகி வாழ்வது பாலைவனதில் தனித்து நடப்பது போன்ற கொடுமை என்பதை மட்டும் தெரிந்தே மறைத்தார்கள் -
வாழ்க்கை தேர்வில் காலங்கள் மட்டும் படிப்பினைகள் தரும்; உறவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை தவறான வழியின் விளக்கம், அனுபவித்தால் விளங்கிடும்-
தனிமை ஏன் என்று
உணர வேண்டும்- வாழ்க்கையின் பொருள் தனிமையில்
இல்லை.  

எழுதியவர் : Ka.mu.ismail (27-Oct-14, 8:45 am)
பார்வை : 60

மேலே