மழையே மழையே

செங்கல் கட்டிடங்களுக்கு
இடையே
செம்மை படுத்த ஏதும்
இல்லை
உன் மெய் ஊற்றி
தீர்த்தாலும் இங்கு
நன்மை அது கிடைக்காது
அக்கறை யோடு பொழிந்தாலும்
இக்கரை ஏற்க போவதில்லை
சர்க்கரை போன்ற உன்
துளிகள்
சாக்கடை நீராய் போகும்
இங்கு
பச்சை வெளிகள் தென்பட்டால்
பட்டென பொழிந்து தள்ளிடு நீ
பட்டணம் வந்து பொழியாது
பட்டிகள் தேடி சென்றிடு நீ