உன் இலக்கு

தூது விட்டேன் தூது விட்டேன்

புறாவினைத் தூது விட்டேன்
புறா திரும்பி வரவில்லை

கிளியைத் தூது விட்டேன்
கிளியும் திரும்பி வரவில்லை

புயலைத் தூது விட்டேன்

புயல் தென்றலானது
பரவா இல்லையென தென்றலையும்
ஆனால், அதுவும் வரவில்லை
இறுதியில்தான் தெரிந்தது
இலக்கு இல்லாமல் தூது விட்டோமென்று

இலக்கை நோக்கி ஓடுபவனே
வெற்றி பெறுவான் .
இலக்கு இல்லாமல் ஓடுபவன் துன்பத்தையே அடைவான் .

உனக்கென ஓர் இலக்கு ; உனக்கென ஒரு பாதை
வெற்றி நிச்சயம் .

எழுதியவர் : ஜாவி (27-Oct-14, 3:37 pm)
Tanglish : un ilakku
பார்வை : 106

மேலே