என் கொள்கை
வான்கொடுக்கும் மழையதுவை வான்கொடுப்பதில்லை
***நிலமிருக்கும் நீரதுவே ஆவிஎனகொண்டு
நான்கொடுக்கும் கவிதையெல்லாம் நான்கொடுப்பதில்லை
***நாவிருக்கும் நாயனவன் நல்லருளைக்கொண்டு
தேன்கொடுக்கும் பகுத்தறிவை நான்தூற்றவில்லை
***தெளிந்திருந்தால் பெருமைதான் நான்மறுக்கவில்லை
ஏன்கொடுத்தேன் இக்கவிதை என்கொள்கைகூற
***எப்பொழுதும் தமிழெனக்கு உயிரதனைப்போல