சாந்தி வேண்டும் சாந்தி வேண்டும்
**இதுவரை நான் பார்த்திராத ,பேசிராத தூரத்து நண்பராய் என் கவிதையின் வாசகனாய் இருக்கும்
நண்பர் சந்திரன் துரைசாமி அவர்களுக்கு இது சமர்ப்பணம் ****
சாந்தி வேண்டும் சாந்தி வேண்டும்
*****சந்ததமும் சாந்தி வேண்டும்
*****சண்டைகளை மனிதர்விட்டு
*****சங்கடங்கள் தொலைத்துவிட்டு
ஏந்தி தினம் அமைதி வழி
*****ஏற்றமுடன் ஏற்க வேண்டும்
*****ஏமாற்றும் குணத்தைவிட்டு
*****ஏழைகளை அருகணைத்து
மாந்த ரினைப் பிரித்து வைக்கும்
*****மதம்சாதி ஒழிக்க வேண்டும்
*****மனங்களினால் ஒன்றுபட்டு
*****மயக்கங்கள் கொன்றுவிட்டு
சூழ்ந்தி ருக்கும் தீமை எல்லாம்
*****சுட்டெரித்து சுகம்வேண்டும்
*****சுற்றுப்புற வளம்வேண்டும்
*****சுடரறிவு பெறவேண்டும்
சாந்தி வேண்டும் சாந்தி வேண்டும்
*****சந்ததமும் சாந்தி வேண்டும்