வானவில்லைக் காதலிக்கும் வான்கோழியாய்

வானவில்லைக் காதலிக்கும்
வான்கோழியாய் நான் !

நீ வரும் வேலையில் எனை
மறந்து சிறகடிக்கிறேன் !

பறக்க முடியாமல் வீழ்ந்தாலும்
பாய்ந்து எழுகிறேன் !

எப்படியும் உன்னைப் பிடித்துவிட எண்ணி
பறக்கிறேன் என்னை மறந்து !

கண் இமைக்கும் நேரத்தில்
காணாமல் போகிறாய் !

களைத்துப் போய் நான்
கண்மூடிக் காத்திருக்க !

வந்து குவிகின்றன காதல் தோல்விக்கான
வருந்தாதே எனும் ஆறுதல் வசனங்கள் !

பாவம் அவர்களுக்கு எப்படித் தெரியும்
கண் மூடிக் காத்திருக்கும் நேரத்தில்தான் !

கலைந்த உன் உருவம் எனை வந்து
அணைத்துக் கொள்கிறதென்பது !

எழுதியவர் : முகில் (27-Oct-14, 11:33 pm)
பார்வை : 86

மேலே