மறுமொழி ஆகிவிடுமோ

கொஞ்ச நேரமே கொட்டித்
தீர்த்த மழையாய் நீ !

ஒதுங்க இடம் கிடைக்கா ஒற்றை
அடிப் பாதையில் நான் !

கொஞ்சும் நேரமாய் இருந்திருக்கக்
கூடாதா இது !

முழுவதும் நனைந்த பின்னும்
வியர்க்கிறதே எனக்கு !

மரங்கள் இல்லா மைதானத்தில்
மழையை எதிர்பாத்து !

நிற்கிறேன் மதி மயங்கி உன்
விழி பார்த்து !

ஒரு மொழி பேச முடியாமல்
நிற்கிறேன் உன்

மறுமொழி எனக்கு மறுமொழி
ஆகிவிடுமோ என்ற பயத்தில் !

எழுதியவர் : முகில் (27-Oct-14, 11:14 pm)
பார்வை : 77

மேலே