என் நண்பன்

அன்றாட வாழ்வில்
அனைவரும் பெற்ற
பிரிமுகம் இல்லாத
அருள் மழை நட்பு !

எனக்கும் ஓர் நண்பன்
முடிவில்லா முற்றுப்
புள்ளியாய் எங்கள் நட்பு !!

நானும் என் நண்பனும்
நாற்பது பேர் பார்க்கும் படி
நாளும் நகைத்தபடி
நன்றாக வாழ்ந்த நாட்கள் !!

ஊரும், உறவும்
மூக்கின் மேல் விரல்
வைத்து வியக்கும் படிக்கு
விந்தையான நட்பு !!

விண்மீன்களை கணக்கிட்டு
இருவரும் தோற்றதை
மறுத்து நான் தான்
நான் தான் வென்றதென
வாதம் செய்து திரிந்தோம் !!

எட்டாத கனியென நினைத்ததை
எட்டும் படிக்கு செய்து
தன்னம்பிக்கையை கொடுத்தான் !!

ஆருயிர் நண்பன் அவன்
கைககளை கோர்த்து
தலை சாய்க்க தோளும் கொடுத்ததில்
தாய்க்கு இணையான பாசத்தை
நண்பன் அவன் அரவணைப்பில்
நாளும் உணர்ந்தேன் !!

மறு ஜென்மம் உண்மை என்றால்
மீண்டும் நீயே வேண்டும்
என்றும் என் நண்பனாக !!

எழுதியவர் : யாதிதா (28-Oct-14, 4:45 pm)
Tanglish : en nanban
பார்வை : 682

மேலே