கனவுகள் மெய்பட வேண்டும்
தோல்வியால் சறுக்கி விழுவாய்.......
நீ விழும் இடம் !!!!!
விடாமுயர்சியின் மடியாக தான்
இருக்க வேண்டும் .......
தன்னம்பிக்கை வேள்வி நிகழ்த்து .....
அதில் உன்
முயலாமை என்ற பிணி நீங்கும் .....
நீ ஏழையாக பிறந்தாலும்
உன் அறிவுக்கு ஏழ்மை எது ?
ஆழ் மனதில் இலக்குகளுக்கு
அடித்தளம் அமைத்துக்
கொள் ...
உண்மை தோரணங்களை
உன் உழைப்பிற்கு !!!
அணிவித்து வியர்வை
முத்துக்களை ஈன்றேடு ......
எப்போது நீ
"சாதிக்க முடியும் "
என முணு முணுக்கிராயோ
அப்போதே நீ
சாதனைக் கோட்டைக்குள்
சாதிப்பதற்காக
தள்ளப்படுவாய்........
சாதிக்க முயற்சிக்கும்போது
தலை குனிவு தலைவிரித்தாடும் .....
அப்போது உன் பொறுமைக்கு
உயிர் ஓட்டம் வேண்டும் ........
இலக்கை நோக்கி !!!!!
பணிவு கொண்டு படை எடு
படைத்திடுவாய் ஒரு புதிய சரித்திரம் !!!!!!!!
புகழ்ந்திடும் இந்த புதிய சமுதாயம் !!!!!!!!!
-ரா. தாமோதரன்
மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பிரிவு
சோனா தொழில்நுட்ப கல்லூரி
ஜங்ஷன் மெயின் ரோடு
சோனா நகர் ,சேலம் -636006