கடந்த பாதைகள்

காதலிக்கின்றேன் நண்பா!.......
கண்ணெதிரே தெரிகின்ற காட்சிகளினை.....
காலம் எல்லாம் நேசிப்பேன்.
கண்கள் மூடும் நொடிப்பொழுது வரை....
காற்றை,நீரை,நிலத்தை ...
உயிரை கொல்லும் கொடிய விசத்தை...
உடலே மூழ்கும் ஆழக்கடலை
சுட்டெரிக்கும் செந்தணலை
வேட்டுக்கள் தீர்க்கும் துப்பாக்கியை....
வேதனை தந்த நாட்களினை........
நான் கடந்த பாதைகளினை......
இன்றைய நிலைமைகளுக்கே ...
அன்றே வழிசமைத்த நினைவுகளே
நான் மறவேன் வாழும் வரைக்கும்............