எங்கே நீ

முன்னும் பின்னுமாக..
வரிசையில் நடப்பட்டு..
குலுங்கிய செடிகளாய்
மகிழ்ந்திருந்தோம் !

சூறைக் காற்றாக
வீசிய விதி
வீசி எறிந்தது ..நம்மை..
வேறு வேறு வீதிகளில்!

விதியின் கருணை..
அழிந்திடாமல் நான்..
இருக்கிறேன் !
இன்னொரு அன்பு தோட்டத்தில்!
நீ இருக்கிறாயா ..?
எங்கேனும் ஒரு தோட்டத்தில்?
இல்லை..
அழித்தே விட்டதா உன்னை
அந்த விதி?

எழுதியவர் : karuna (29-Oct-14, 11:02 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : engae nee
பார்வை : 635

மேலே