நினைவுகளின் சங்கமம்
நீ வேண்டாமென்ற சில்லறையை
நான் வேண்டுமென்றே மிச்சப்படுத்துகிறேன்
தூசியில்லாத என் புத்தகப்பைக்குள்
ஒரு பொக்கிஷமாக.........!
பொறுமையில்லாத என்னில்
பலமணி நேரமென்றாலும்
பரவாயில்லையென்றே
காத்துக்கிடக்கிறது என் கால்கள்
போடியென்று நீ விட்டுசென்ற
அதே நடுத்தெருவில்
உன் வருகைக்காக ..........!
கல் மனிதன் நீயென்றாலும்
கள்வனாய்
நீ கொடுத்த
திருட்டு மோதிரம்
இன்றும் என் விரல்களில் தான்
உயிர் வாழ்கிறது .........!
மை கொண்டு நீ தீட்டிய
சொதப்பல் காகிதங்கள் கூட
வாடாமல்
தினம் என் கண்ணீர் பட்டே
மலர்ந்து கொண்டிருக்கிறது..........!
நீ நீட்டிய ஒற்றை ரோஜாவை
விட்டு பிரிந்த
ஒற்றை இதழைக் கூட விட்டு வைக்காமல்
சேர்த்து வைக்க பார்க்கிறேன்
நம்மை போல் ஆகிவிட கூடாதென்று ........!
பாதியில் வந்த நீ இப்படி
பைத்தியமாக்கி விட்டு சென்று விட்டாய்
நீ தந்த நினைவுகள் மட்டும் நினைவிலிருக்க .......!